2.1 KiB

choco

சாக்லேட்டி தொகுப்பு மேலாளர். install, upgrade, pin போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனிப் பக்கம் உள்ளது. மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/choco/commands/.

  • ஒரு தொகுப்பை நிறுவு:

choco install {{தொகுப்பின்_பெயர்}}

  • ஒரு குறிப்பிட்ட நிறுவப்பட்ட தொகுப்பை மேம்படுத்து:

choco upgrade {{தொகுப்பின்_பெயர்}}

  • காலாவதியான அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்து மற்றும் அனைத்து வினவல்களுக்கும் தானாகவே உறுதிப்படுத்து:

choco upgrade all {{[-y|--yes]}}

  • ஒரு தொகுப்பை நிறுவல் நீக்கு மற்றும் அனைத்து வினவல்களுக்கும் தானாகவே உறுதிப்படுத்து:

choco uninstall {{தொகுப்பின்_பெயர்}} {{[-y|--yes]}}

  • பெயர் அல்லது முக்கிய வார்த்தைமூலம் தொகுப்புகளைத் தேடு:

choco search {{தேடல்_வினவல்}}

  • கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தொகுப்புகளையும் பட்டியலிடு:

choco list

  • புதிய பதிப்புகள் கிடைக்கப்பெறும் தொகுப்புகளைக் காட்டு:

choco outdated

  • ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்து ஒரு தொகுப்பை நிறுவு:

choco install {{தொகுப்பின்_பெயர்}} {{[-s|--source]}} {{மூலம்}}